சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Chennai India Crime
By Dhayani Jun 01, 2026 10:02 AM GMT
Report

சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்ற இலங்கை பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல் | Sri Lankan Tamil Girl Bar Accident Death Chennai

சிசிடிவி கமரா காட்​சிகள் அடிப்​படை​யில் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விடுதிக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்துள்ளனர்.


சென்னை,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த யுவதி பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். திருவள்ளூரை சேர்ந்த இவரது தோழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த யாசினி பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் சென்று சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது 20 ஆம் திகதி சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் நடன நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கேளிக்கை விடுதியில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.

தாய் விடுத்துள்ள கோரிக்கை

இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல் | Sri Lankan Tamil Girl Bar Accident Death Chennai

குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வு துணை ஆணை மணிகண்டன் விடுதிக்கு சீல் வைத்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த யுவதி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ பொலிஸார்​ தெரி​வித்​துள்ளனர்​.

இதற்கிடையே குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த யுவதியின் தாய் மேரி ஸ்டெல்லா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அரச நிறுவனங்களில் அதிரடியாக நடைமுறைக்கு வரும் புதிய தடை

அரச நிறுவனங்களில் அதிரடியாக நடைமுறைக்கு வரும் புதிய தடை

நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!

நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US