ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government Battaramulle Seelarathana Thero
By Aanadhi Jun 01, 2026 10:47 AM GMT
Report

தற்போதைய ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மிக ஆடம்பரமான வாழ்க்கைமுறையொன்றுக்கு மாறியுள்ளதாக பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போது ஜனசெத பெரமுண கட்சியின் தலைவரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர், மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பிரதம நீதியரசருக்கு பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி உத்தேசம்! நீதித்துறை கடும் எதிர்ப்பு

பிரதம நீதியரசருக்கு பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி உத்தேசம்! நீதித்துறை கடும் எதிர்ப்பு

தேரர் கடும் விமர்சனம்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மக்களுக்குத் துன்பத்தை விளைவித்து தற்போது ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்று ஜனசேத முன்னணியின் தலைவர் வணக்கத்திற்குரிய பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம் | Seelarathna Thero Criticizes Luxurious Life Npp

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் நேற்று (31) ஊடகங்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இலங்கை பெரும் ஆபத்தில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைவரும் இந்த அப்பாவி, ஏழை மக்களின் துன்பங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், இப்போது மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.

தற்போது டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. மக்கள் 'சூர சரதியல்' திரைப்படத்தைப் பார்க்கத் தயாராக இருந்தனர்.

(பொதுமக்களின் நன்மைக்காக சூரத்தனமான முறையில் செயற்படத்தக்க அரசாங்கமொன்றை எதிர்பார்த்திருந்தனர்) ஆனால் இறுதியில் அவர்கள் கடும் ஏமாற்றத்தையே சந்திக்க நேர்ந்துள்ளது. பொதுமக்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை.

இறுதிப்போட்டிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து! உயிர்தப்பிய வீரர்கள்

இறுதிப்போட்டிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து! உயிர்தப்பிய வீரர்கள்

மக்களின் சாபம்

மக்களை ஆட்சிக்குக் கொண்டுவந்த இந்த அரசாங்கம், மக்களுக்கு உண்மையாகவே எதையும் கொடுப்பதில்லை. இப்போது எண்ணெய் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் மக்கள் எப்படி வாழ்வார்கள்? தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த நாள் முதல், எந்தவொரு ஏழைக்கும், ஏழை கிராமங்களில் வாழும் அப்பாவி மக்களுக்கும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

இப்போது டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் மீண்டும் இப்படி உயரும்போது, ​​மீன்பிடித் தொழிலும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் சரிந்துவிடும்.

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆடம்பர வாழ்க்கை! சீலரத்ன தேரர் கடும் விமர்சனம் | Seelarathna Thero Criticizes Luxurious Life Npp

சாமானிய மக்கள் ஒரு கோப்பை தேநீர் அருந்த, ஒரு ரொட்டி சாப்பிட கொஞ்சம் சோறு சாப்பிட எப்படி முடியும்? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர வாழ்க்கை வாழும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு, பொதுமக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

'நீங்கள் என்ன சாப்பிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை, எங்களிடம் அதிகாரம் இருக்கிறது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களை சிறையில் அடைப்போம்.' என்பதே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

எனவே, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களே, நினைவில் கொள்ளுங்கள், இந்த நாட்டை அழித்துவிடாதீர்கள்.மக்களின் சாபம் உங்களை சும்மா விடாது என்றும் ' பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US