அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
அரசாங்க தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முற்றிலும் பொய்யானது
விசாரணைக் கைதியாக சிறைச்சாலையில் உள்ள ஒருவருடன் தனக்குத் தொடர்பு இருந்ததாக ஊடகங்கள் பரப்பி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் தீய நோக்கமுடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'அந்தத் தொலைபேசி அழைப்புகள் விளக்கமறியல் சிறையில் உள்ள நபரிடமிருந்து வரவில்லை என்று நான் தெளிவாகக் கூறினேன்.

அவை எங்கள் அரசியலில் எங்களுடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து வந்தன; அவர் எங்களுடன் அரசியலில் பணியாற்றியபோது பல தொலைபேசி அழைப்புகளைச் செய்துள்ளார். பின்னர், அவரது உறவினர் சிறையில் அடைக்கப்பட்டபோது, அந்த உறவினர் விளக்கமறியல் சிறையில் அந்த சிம் கார்டைப் பயன்படுத்தியுள்ளார்.
இதுதான் இதன் உண்மைநிலை. குற்றப் புலனாய்வுத் துறை என்னை அழைத்தபோது, வெலிக்கடை சிறைக்குள் இருந்து எந்தத் தொலைபேசி அழைப்புகளும் வரவில்லை என்று கூறினேன்.
முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
அவர்கள், அந்தத் தொலைபேசி அழைப்புகள் 2021, 2024-ஆம் ஆண்டுகளில் வந்திருப்பதாகக் கூறினார்கள். பின்னர் இப்போது, வெலிக்கடை சிறைக்குள் இருந்து எனக்கு அழைப்பு வந்ததாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, எங்களைப் பற்றிய அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, எங்களைப் பற்றி ஒரு வெறுப்பான மற்றும் தவறான கருத்தைப் பரப்பும் நோக்கிலேயே அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
அந்தச் செய்தியை வெளியிட்ட நபர் குறைந்தபட்சம், 'அப்படிப்பட்ட செய்தி எனக்கு வந்ததா என்று தொலைபேசியில் கேட்டிருந்தால், நான் அதற்குப் பதிலளித்திருப்பேன்' அரசியல் செயற்பாட்டுக்குழுவொன்று, குறிப்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானிகள், எனக்கு எதிராக ஒரு திட்டமிட்ட, நற்பெயரைக் கெடுக்கும் சதியொன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
குற்றவாளிகள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை.
சட்ட நடவடிக்கை
எனது பல்கலைக்கழக நாட்கள் முதலே சமூக நீதி மற்றும் இனவெறிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி ஒரு தூய்மையான அரசியல் வரலாற்றைக் கட்டியெழுப்பியுள்ளேன்.

மக்களிடையே தவறான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன், என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி (ITN) மற்றும் லேக் ஹவுஸ் (Lake House) போன்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடக நிறுவனங்களும் இதற்குப் பங்களித்துள்ளனர்.
அந்தச் செய்தியைத் திருத்தி வெளியிட லேக் ஹவுஸ் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே மிக விரைவில் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புக்கு (ITN) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 21 மணி நேரம் முன்
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam