ரஸ்யாவில் செய்தியாளருக்கு அனுப்பப்பட்ட பன்றியின் தலை! ரஸ்ய படை விநியோகம் மீது தாக்குதல்! (காணொளி)
உக்ரைனியப் படைகள் நாட்டில் ரஸ்யப்படையினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சின் நாளாந்த உளவுத்துறை புதுப்பிப்பு செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட பெர்டியன்ஸ்க் துறைமுகத்தில் தரையிறங்கும் கப்பல் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியின்படி உக்ரைனியர்கள், ரஸ்யாவின் முக்கிய தளபாட இலக்குகளை தொடர்ந்து குறிவைப்பார்கள், எனவே ரஸ்ய படையினருக்கான புதிய விநியோகங்கள் இழக்கப்படும்
அத்துடன் உக்ரைனில் தாக்குதல்களை நடத்துவதற்கான அவர்களின் திறனைக் குறைத்து,மேலும் சேதங்கள் ஏற்படுத்தப்படும் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை ரஸ்யாவின் சுதந்திர வானொலி ஒன்றின் ஆசிரியரது இல்லத்துக்கு வெளியே பன்றி தலை வீசப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்பில் எதிர்;ப்பை வெளிக்காட்டிய நிலையில் அவரின் வானொலி ரஸ்ய அதிகாரிகளால் சில நாட்களுக்கு முன்னர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்தது.
இதனையடுத்தே அவரது வீட்டுக்கு வெளியேற பன்றியின் தலை வீசப்பட்டிருந்தது.
Russian denazification update: unknown people left a pig's head outside Ekho Moskvy editor Alexei Venediktov's apartment and put a Ukrainian crest sticker on his door with "Judensau" – Jewish pig" – written on ithttps://t.co/2893IzRFnP pic.twitter.com/IfGjBHhHTW
— max seddon (@maxseddon) March 24, 2022
இதனை கூரியர் சேவை பணியாளரே எடுத்து வந்தார் என்று கூறப்பட்டபோதும் குறித்த கூரியர் நிறுவனம் பன்றியின் தலையை எடுத்து வந்தவர் தமது பணியாளர் அல்லர் என்று அறிவித்துள்ளது.
அத்துடன் வீட்டின்; முன் கதவில் யூத எதிர்ப்பு சுவரொட்டியும்; ஒட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வானொலியின் ஆசிரியரான, எலெக்ஸி வெனெடிக்டோவ் - ரஸ்யாவை நாஸி ஜெர்மனியாக மாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.