ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை)

president speech Ukrainian Russo
By Amal Mar 05, 2022 09:08 AM GMT
Report

ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்ரைய்னியர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போர் பகுப்பாய்வின்படி, உக்ரேனிய இராணுவம், ரஸ்ய இராணுவத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அளவானது.

இந்தநிலையிலேயே, 66,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆண்கள் நாட்டிற்காக போராடும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ளனர் என்று உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ஒலெஸ்கி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்

இதில் கடந்த ஆண்டு செம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக மோல்டோவாவின் ஷெரிப் டிராஸ்போல் அணியை அதிர்ச்சிகரமான வெற்றிக்கு அழைத்துச் சென்ற 56 வயதான கால்பந்து பயிற்சியாளர் யூரி வெர்னிடுப்டும் ஒருவராவார். 

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech


உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச் சென்றவர்களையும் ரஸ்ய படையினர் தாக்கிய சம்பவம் ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

சண்டை தீவிரமடைந்து வந்தபோது ஒரு தந்தையும் மகனும் உக்ரைய்னில் இருந்து வெளியேற முயன்றனர்.

எனினும் புட்டினின் படையினர் எவ்வித எச்சரிக்கையும் இன்றி அவர்களது வாகனத்தை நோக்கி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன்போது தந்தை இறந்துவிட்டார் அவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்று மகன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



ஸூம் மூலம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேசுவதற்கு அமெரிக்க செனட் சபை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸெலென்ஸ்கி ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் தொடர்பில் இருந்துள்ளார்,

எனினும் ரஷ்யா ஒரு வாரத்துக்கு முன்னர் நாட்டை ஆக்கிரமித்த பின்னர் செனட் சபை முழுவதுமாக உக்ரேனிய தலைவருடன் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த வாரம், உக்ரைனின் அமெரிக்க தூதர் ஒக்ஸானா மார்கரோவா செனட் உறுப்பினர்களைச் சந்தித்து, ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதற்கு தனது நாட்டுக்கு அவசரமாக உதவிகள் தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


உக்ரைய்னின் மற்றும் ஒரு அணு ஆலையை நெருங்கும் ரஸ்யபடைகள்!

உக்ரையின் மற்றும் அணுமின் நிலையத்தை, ரஸ்ய படைகள் நெருங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் இரவு, உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஸ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, உலகம் குறுகிய முறையில் பேரழிவைத் தவிர்த்துவிட்டது.

எனினும் தற்போது, உக்ரைனின் இரண்டாவது பெரிய அணுசக்தி நிலையத்திலிருந்து 20 மைல் தொலைவில் ரஸ்ய படைகள் நிலைகொண்டுள்ளதாக லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், தெரிவித்துள்ளார்

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

கியேவிற்கு தெற்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள யுசுக்ரைய்ன்  Yuzhoukrainsk மின் நிலையத்தையே அவள் குறிப்பிட்டுள்ளார்

எனவே ரஸ்யாவின் படைகள் தங்கள் ஆபத்தான தாக்குதலை நிறுத்தக் கோருவதில் சர்வதேச சமூகம் ஒருமனதாக இருக்க வேண்டும் என்று லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.


உக்ரைய்ன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க திரளும் உலக மக்கள்! 

உக்ரைன் மற்றும் அதன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசி மற்றும் செக் தலைநகர் பிராகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

அங்கு காணொளி இணைப்பு மூலம் ஸெலென்ஸ்கி உரையாற்றினார்.

அத்துடன் பிராங்பேர்ட், வில்னியஸ், லியோன் மற்றும் பிராட்டிஸ்லாவா ஆகிய இடங்களில் நடைபெற்ற போர் எதிர்ப்புப் போராட்டங்களின்போதும் அவர் உரையாற்றினார்;.

இதேவேளை லிஸ்பன், லூசர்ன், லண்டன், சியோல், ஜகார்த்தா மற்றும் லா பாஸ் ஆகிய இடங்களில் உக்ரைனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

ஜோர்ஜியா

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

செக் குடியரசு

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

செக் குடியரசு

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

ஜேர்மன் பிராங்போட்

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech


ரஸ்யாவின் இரண்டு உல்லாசப்படகுகள் இத்தாலியில் பறிமுதல்! 

ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க ரஸ்யாவின் இரண்டு செல்வந்த தன்னலக்குழுக்களுக்குச் சொந்தமான படகுகளை இத்தாலிய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரும்; ரஸ்யாவின் செல்வந்தருமான எலெக்ஸி மொர்டாரஸோவ் என்பவருக்குச் சொந்தமான 27 மில்லியன் டொலர் மதிப்புள்ள 213 அடி (65 மீட்டர்) படகு ஒன்றை வடக்கு இம்பீரியா துறைமுகத்தில் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ரஸ்யர்களுடன் போரிடுவதற்காக நாடு திரும்பிய 60 ஆயிரம் உக்ரைய்னியர்கள்! (நேரலை) | Russo Ukrainian War President Speech

அதேநேரம் புட்டினுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மற்றொருவரான ஜெனடி டிம்செங்கோவுக்குச் சொந்தமான படகும் கடலோர நகரமான இம்பீரியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொர்டாஸோவ் மதிப்பிடப்பட்ட 27 பில்லியன் டொலர் பெறுமதியைக்கொண்ட சொத்துக்களை கொண்டிருக்கிறார்

அதே நேரத்தில் எண்ணெய் வளத்தில் 17 பில்லியன் டொலர் சொத்துக்களை கொண்டுள்ளார்

கடந்த திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஸ்யா மீது விதிக்கப்பட்ட தடையில் 680 தனிநபர்கள் மற்றும் 53 நிறுவனங்கள் அடங்குகின்றன.


“உக்ரைய்னில் உங்கள் முடிவு காரணமாகவே மக்கள் இனி இறப்பார்கள்” 

“உக்ரைன் வீழ்ந்தால், ஐரோப்பா முழுவதும் வீழ்ச்சியடையும்." என்று உக்ரைய்னிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். உக்ரைய்ன் நாட்டின் வான்வெளியை பறப்பற்ற மண்டலமாக நிறுவ நேட்டோ மறுத்தமையை அவர் கண்டித்துள்ளார்

எனவே இன்று முதல் இறக்கும் அனைத்து மக்களும் உங்களால் இறக்க நேரிடும்.

இது உங்கள் பலவீனம் மற்றும் உங்கள் தொடர்பு துண்டிக்கப்படுவதன் காரணமாகவே இறப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற "நேட்டோ உச்சிமாநாடு, பலவீனமான உச்சிமாநாடு. குழப்பமான உச்சிமாநாடு. இந்த மாநாட்டின்போது ஐரோப்பாவுக்கான சுதந்திரத்திற்கான போராட்டத்தை அனைவரும் முதன்மையான இலக்காகக் கருதவில்லை என்பதை எடுத்துக் காட்டும் உச்சிமாநாடாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ நாடுகளின் அனைத்து உளவுத்துறை அமைப்புகளும் எதிரிகளின் திட்டங்களை நன்கு அறிந்திருக்கின்றன.

ரஸ்ய தாக்குதலைத் தொடர விரும்புவதை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இந்தநிலையில் உக்ரைன் வான்வெளியை மூடுவது நேட்டோவுக்கு எதிராக ரஸ்யாவின் நேரடி ஆக்கிரமிப்பைத் தூண்டும் என்று நேட்டோ அமைப்பு கூறிவருகிறது.

இது உக்ரைய்னை விட பல மடங்கு வலிமையான ஆயுதங்களை வைத்திருந்தாலும், பலவீனமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களின் கற்பனையாகும் என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்

உக்ரைன் பிழைக்கவில்லை என்றால், முழு ஐரோப்பாவும் வாழாது. அத்துடன் "உக்ரைன் வீழ்ந்தால், ஐரோப்பா முழுவதும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US