ஒரே பார்வையில்- உக்ரைன் போர்க்களம், இராஜதந்திர களம்
உக்ரைன் போர் களத்தில், கிழக்கு உக்ரைனில் உக்ரைனிய மற்றும் ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, மரியுபோலில் நிலைமை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தும் இறுக்கமாகவே உள்ளது என்றும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்
கார்கிவ் திசையிலும், டான்பாஸ் மற்றும் டினிப்ரோ பகுதிகளிலும் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பொதுகுடிமக்களை குறிவைப்பதாக ஸெலென்ஸ்கி மீண்டும் குற்றம் சாட்டினார்.
இதேவேளை கெர்சன் மற்றும் பிற இடங்களில் எதிரிகள் மீது எதிர் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் டொனெட்ஸ்க் அருகே உள்ள மரின்கா நகரத்தை மீண்டும் தாம் கைப்பற்றிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்
போர்க் கைதிகள் பரிமாற்றத்தில் 76 உக்ரைனியர்களை ரஷ்யா திரும்ப ஒப்படைத்துள்ளதாக உக்ரைனின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர களம் -
------------------------------
மேற்கத்திய தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு அதிகரிப்பது குறித்து அறிவித்துள்ளனர்.
கியேவுக்கு மேலும் பீரங்கி அமைப்புகளையும் இராணுவ உதவிகளையும் அனுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
பிரிம்ஸ்டோன் என்ற கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் பெற்றுக்கொள்வதற்கு பெர்லின் நிதியுதவி அளிக்கும் என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் கடுமையாக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் எச்சரித்துள்ளார்
இதேவேளை போரில் சேதமடைந்த உக்ரைன் தாங்கிகளை பழுதுபார்க்க செக் குடியரசு முன்வந்துள்ளது
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri