ரஸ்ய ஆக்கிரமிப்பினால் 3000 உக்ரைன் படையினர் மரணம், ஆயுதங்கள் கிடைத்தால் அமைதி வரும் -ஸெலென்ஸ்கி
ரஸ்ய படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 3,000 உக்ரைனிய படையினர்; உயிரிழந்துள்ளதாகவும், 10,000 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
ஒரு மாதத்திற்கு முன்னர் போரில் 1,300 உக்ரைனிய துருப்புக்கள் இறந்ததாக ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை விட அதிகமான ரஸ்ய படையினர் போரில் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்
போரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை உக்ரைனிய ஜனாதிபதி கூறவில்லை.
இதேவேளை உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கணிப்பது கடினம் என்று அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் பொருளாதாரம் மற்றும் ரஸ்ய சமூகத்தின் உணர்வுகள் என்பனவே மோதலின் காலத்தை தீர்மானிக்கும் இரண்டு காரணிகளாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்க்களத்தில் உக்ரைன் இராணுவத்தின் வெற்றி உண்மையில் வரலாற்று முக்கியம் என்ற அளவில் குறிப்பிடத்தக்கது. எனினும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இன்னும் சுத்தப்படுத்த இந்த வெற்றி போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
எனினும் ரஸ்ய இராணுவ இயந்திரத்தை கட்டுப்படுத்த இன்னும் இந்த தடைகள் போதுமானதாக இல்லை என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
எனவே உக்ரைன் கோரிய அனைத்து ஆயுதங்களும்; எவ்வளவு விரைவாக கிடைக்கிறதோ, அந்தளவில் உக்ரைனின் நிலை வலுவடையும், விரைவில் அமைதி வரும் என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri