மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்த புடின்
இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன.
தீவிரமடையும் போர்
இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போதை போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமாக வருகிறது.
போர் விதிமுறைகளை மீறும் ரஷ்யா
போர் விதிமுறைகளை மீறி ரஷ்யா பள்ளிகள் வழிபாட்டுத்தளங்கள் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் போர் விதிமுறைகள் மீறப்படவில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது.
உக்ரைனுக்கு அடுத்து உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வரும் நிலையில், அமெரிக்க பலமுறை பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மில்லியன் டொலர் கணக்கில் உதவி வருகிறது.
ஆனால் இந்த கோர பேரழியிவில் இருந்து உக்ரைன் மீளுமா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யா வசம் வந்துள்ள நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள லூஹன்ஸ்க், டெனட்ஸ்க், கர்சன், ஜெப்ரோஸியா உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ரஷ்ய அறிவித்திருந்தது.
நான்கு பிராந்தியங்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அது ரஷ்யாவுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் இந்த சர்வதேச கோட்பாடுகளை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என மேற்கத்திய நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன.
அதனையும் மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 27 ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே ரஷ்யாவுக்கு சாதகமாகவே வந்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து உக்கரைநாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களையும் ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வதாக அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளார்.
மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கிரனின் நான்கு பகுதிகளையும் ரஷ்யாவின் பகுதிகளாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய புதின்," ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலக நாடுகள் விரும்புகின்றனர். ஏற்கனவே இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலக நாடுகளை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் சோவியத் யூனியனை மீண்டும் கட்டியெழுப்பவும் ரஷ்யா முயற்சிக்கவில்லை
ரஷ்யா
கடந்த காலங்களில் சோவியத் தலைவர்கள் மிகப்பெரிய நாடாக இருந்த ரஷ்யாவை அழித்துவிட்டார்கள். கடந்த காலத்தை மீண்டும் கொண்டுவர முடியாது. ரஷ்யாவுக்கு அது தேவையும் இல்லை. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் அவற்றின் அதிகாரத்தை எங்கள் மீது காட்ட முயன்றது.
அவர்களின் ஆணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் பசி குளிர் விரக்தி நிறைந்த 90 ஆம் ஆண்டு காலகட்டங்கள் என பலவற்றையும் மீறி ரஷ்யா விடாமுயற்சியுடன் புத்துயிர் பெற்று மீண்டும் வலிமை சேர்த்துக் கொண்டு இந்த உலகில் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.