50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : விமானத்தின் எரியும் உடற்பகுதிகள் மீட்பு
புதிய இணைப்பு
சீன எல்லைக்கு அருகிலுள்ள அமுர் பகுதியில் ரஷ்ய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட தகவல்களின்படி, யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் ரஷ்ய அன்டோனோவ்-24 விமானம், 40 பேரை ஏற்றிச் சென்றபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்ததாக உள்ளூர் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Breaking 🔥🔥
— Nandini Chaar (@ndccomputers) July 24, 2025
Russia Plane Crash
Angara airline flight with about 50 on board crashes in Russia’s ,
Missing Russian plane found crashed in Amur region,
rescuers spot burning fuselage,
no survivors.
Say local reports pic.twitter.com/k5j290M0dA
காணாமல் போன ரஷ்ய பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பகுதியை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேரை ஏற்றிச் சென்ற An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடுவதற்கு
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறியுள்ளதாக உள்ளூர் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#Russian plane carrying 50 passenger goes missing in #Amur region
— Rashid Hasan راشد حسن (@rashidhasanuni) July 24, 2025
The plane, was headed for #Tynda Amur bordering #China. #RussianATC has said that it has lost contact.
Russian Emergency service and rescue team is searching for it & possible wreckage@Russia#RussianUkrainianWar pic.twitter.com/b6TuAgPZJM
முதற்கட்ட தரவுகளின்படி, ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடுவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




