நடுவானில் திடீரென தடுமாறி தீப்பிடித்த ரஷ்ய இராணுவ விமானம் - 15 பேர் பலி
ரஷ்யாவின் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 15 போர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விமான விபத்து இன்று (12.3.2024) ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விமானம் புறப்படும் போது என்ஜினில் தீப்பற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
என்ஜினில் இருந்து கரும்புகை
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானப்படை தளத்தில் இருந்து விமானம் டேக் ஆப் ஆன சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
/1. Russian Il-76 caught fire in the air in the Ivanovo, Russia. The aircraft crashed as a result. 700km to the Ukraine borders pic.twitter.com/o911gqtvwz
— Special Kherson Cat ??? (@bayraktar_1love) March 12, 2024
பின்னர் தீப்பற்றியது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் விபத்து சம்பவிக்கும் போது விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர்
விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |