தீப்பற்றி எரியும் ரஷ்ய விமானங்கள்: ஐரோப்பாவைச் சுட்டெரிக்கப்போகும் புடினின் கோபம்
ரஷ்யா மீது நேற்றைய தினம் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிர்ச்சியோடு கூட ரஷ்யாவின் பதில்தாக்குதல் எப்படி அமைந்துவிடக்கூடும் என்ற அச்சமும் உலகை உலுக்கிவருகின்றது.
நேற்றைய தினம் ரஷ்யாவின் உள்ளே ரஷ்யாவின் வேறு வேறு விமானத்தளங்களில் உக்ரேன் சமாந்தரமாக ஒரே நேரத்தில் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில், ரஷ்யாவின் 40 இற்கும் அதிகமான விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
ரஷ்யாவின் strategic fighters என்றுகூறப்படுகின்ற அணுகுண்டுகளை வீசுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற விமானங்கள் கூட- அந்தத் தாக்குதலில் சேதமானதாகக் கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் விமானங்கள் பற்றியெரிகின்ற காட்சிகள் உலகின் அத்தனை ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்க, புடினின் பதிலடி எப்படி அமையப் போகின்றது என்கின்ற அச்சமும் ஐரோப்பிய மக்களின் மனங்களை கூடவே ஆட்கொண்டு வருகின்றது.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி..

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா News Lankasri
