தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட இனவழிப்பு : யாழில் வெடித்த போராட்டம்
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்து.
குறித்த போராட்டமானது இன்று(04) இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
முல்லைத்தீவு (Mullaitivu) - குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த குறித்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் மே15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.
குறித்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - கஜிந்தன்





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
