ஐரோப்பிய நாடொன்றை குறிவைக்கும் ரஷ்யா.. களத்தில் பிரித்தானியா!
பெல்ஜியத்தின் வான்வெளியில் தொடர்ச்சியான ரஷ்ய ட்ரோன் ஊடுருவல்களுக்குப் பிறகு அந்நாட்டுக்கு இராணுவ உதவியை வழங்க தயார் என பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புப் படைத் தலைவர் ரிச்சர்ட் நைட்டன் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தரப்பு இது தொடர்பில் தன்னிடம் உதவி கேட்டதாகவும் ஆயுதங்கள் விரைவில் அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெல்ஜியத்தின் வான்வெளியில் தொடர்ச்சியான ரஷ்ய ட்ரோன் ஊடுருவல்களால் வியாழக்கிழமை (06.11.2025) இரவு பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கடுமையான அச்சுறுத்தல்
பல நேட்டோ நாடுகள் மீதும் இவ்வாறான ஊடுருவல்கள் இருந்ததால் விமானப் பயணங்கள் சீர்குலைந்தன.
இந்த ஊடுருவல்கள் உறுதியாக ரஷ்யாவின் உத்தரவின் பேரில் நடந்ததாக ரிச்சர்ட் நைட்டன் கூறியுள்ளார்.

இந்த ஊடுருவலுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக சந்தேகிப்பதாக ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளதோடு பெல்ஜிய பாதுகாப்பு சேவைகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இப்போது இதுபோன்ற சம்பவங்கள் பல ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் உட்கட்டமைப்பை பாதிக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan