இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த வெளிநாடு..
காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 வருடங்களாக நீடித்த இஸ்ரேல்- காசா போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் இராணுவம்
இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தப் போரில் பலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டதுடன் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.
இந்தநிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
நெதன்யாகுவுக்கு பிடியாணை
இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இராணுவ மந்திரி காட்ஸ், இராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த பிடியாணை குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan