மலேசியா அருகே நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த கதி!
தாய்லாந்து மற்றும் மலேசியா எல்லைக்கு அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதோடு பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த படகு, கோ தருடாவ் தீவுக்கு அருகே படகு கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசியா பொலிஸார், 10 பேரை மீட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் மியான்மர், ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அடங்குவர் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான சூழ்நிலைகள்
லங்காவி தீவு அருகே தப்பிய பலர் இருக்கலாம் என கருதி அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அத்துடன், வலுவான நீரோட்டம், தேடுதல் நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதால் இன்னும் அதிகமானோர் காணாமல் போகலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதேவேளை, மியான்மரைச் சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்கள் நீண்டகாலமாக வன்முறை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பலர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அகதி முகாம்களில் உள்ள மோசமான சூழ்நிலைகள், நெரிசலான படகுகளில் தங்கள் உயிரைப் பணயம் வைக்க பலரைத் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam