ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : உக்ரைன் ஜனாதிபதி சவால்
உக்ரைனின் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து 20 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்ய கொலையாளிகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவம் தகுந்த நேரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தும் என்றார்.
இதேவேளை ரஷ்யாவில் தற்போது நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு சரியான பாடம் புகட்டப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
