ரஷ்யாவில் இருந்து தப்பியோடும் ஆண்கள் - வெளியானது செயற்கைக்கோள் படங்கள்
ரஷ்யாவில் நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
லார்ஸ் சோதனைச் சாவடியில் ரஷ்யாவிலிருந்து அதன் தெற்கு அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு எல்லையைக் கடக்க நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
உக்ரைனுக்கு எதிராக போரிட இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். சுமார் மூன்று லட்சம் பேரை இணைத்துக்கொள்ளும் வகையில் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்
புடின் உத்தரவு பிறப்பித்ததிலிருந்து, ரஷ்யா தனது எல்லைகளை மூடக்கூடும் என்று செய்திகள் வந்துள்ளன. இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
புடினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ரஷ்யர்கள் தங்களின் அண்டை நாடான ஜோர்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷ்ய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜோர்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
ஜோர்ஜியாவை நோக்கி படையெடுத்துள்ள ரஷ்யர்கள்
இதன் காரணமாக ரஷ்யா - ஜோர்ஜியா எல்லயைில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ரஷ்யர்கள் ஜோர்ஜியாவை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ரஷ்யர்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. Maxar வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் செப்டம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து எல்லைக் கடப்பிலிருந்து வடக்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில் இருந்தது, மேலும் வடக்கே அதிக நெரிசல் தொடரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.