உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 49 பேர் பலி
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இன்று (05.10.2023) ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சுமார் 49 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு உதவிகள்
உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜெலென்ஸ்கி காயமடைந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முதற்பிரஜைக்கு சரியான கவனிப்பை மட்டக்களப்பில் தருவோம்! சபையில் கிண்டலாக கூறிய சாணக்கியன்(Video)
மேலும் ரஷ்ய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவுபவர்கள் குற்றவாளிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம் News Lankasri

குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam
