உக்ரைனின் முக்கிய பகுதியை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா..!
ரஷ்யா, உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, கடந்த 2022இல் ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்ட இப்பகுதியை மாஸ்கோவின் படைகள் முழுமையாக ஆக்கிரமித்து விட்டதாக அறிவித்துள்ளார்.
கிரெம்ளினால் நியமிக்கப்பட்ட பிராந்தியத் தலைவர் லியோனிட் பாசெக்னிக், ரஷ்ய அரசு ஊடகத்திடம் லுஹான்ஸ்க் இப்போது "முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
உரிமை கோரல்கள்
இந்தக் கூற்று உறுதிப்படுத்தப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான மோதலுக்குப் பிறகு, லுஹான்ஸ்க் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் முழுமையாக வரும் முதல் உக்ரேனிய பிராந்தியமாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது உக்ரைனோ பாசெக்னிக்கின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதாக அறிவிக்கவில்லை என கூறப்படுகின்றது.
லுஹான்ஸ்க் மற்றும் பிற உக்ரேனிய பகுதிகள் மீதான ரஷ்யாவின் உரிமை கோரல்கள் சட்டவிரோதமானவை மற்றும் ஆதாரமற்றவை என்று உக்ரைன் தொடர்ந்து கூறி வருகிறது.
மேலும், இந்த பிராந்தியங்கள் மீதான ரஷ்ய இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |