அமெரிக்காவிற்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், அணு ஆயுதப் போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுத மோதல்களில் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதை ரஷ்யா எச்சரித்துள்ளது.
செயற்கைக்கோள்களை அழிக்கலாம்

இதற்கு மத்தியில், உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு உதவப் பயன்படுத்தப்படும் மேற்கத்திய வணிகச் செயற்கைக்கோள்களை மாஸ்கோ குறிவைத்து அழிக்கக்கூடும் என்று ஒரு மூத்த ரஷ்ய இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான கான்ஸ்டான்டின் வொரொன்ட்சோவ் (Konstantin Vorontsov), உக்ரேனிய போர் முயற்சிகளுக்கு மேற்கத்திய செயற்கைக்கோள்கள் உதவுகின்றன, இது அவற்றுக்கு தான் ஆபத்து என எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள்

உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் இத்தகைய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவது ஆத்திரமூட்டுவதாக வொரொன்சோவ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுத மோதல்களில் வணிகம் உட்பட சிவிலியன் விண்வெளி உள்கட்டமைப்பின் கூறுகளை (செயற்கைக்கோள்களை) ஈடுபடுத்துவது பற்றி பேசுவதாக கூறியுள்ளார்.
ரஷ்ய இராஜதந்திரி குறிப்பிட்ட செயற்கைக்கோளைக் குறிப்பிடவில்லை. அதேபோல், அமெரிக்கா அல்லது வணிக செயற்கைக்கோள் வழங்குநர்களிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri