சரணடைந்துவிடுங்கள்! உக்ரைன் வீரர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கிய ரஷ்யா
உக்ரைன் - செவரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு தருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைன் பகுதியான செவரோடோனெட்ஸ்க் நகரை பிற உக்ரைன் நகரங்களுடன் தரைவழியில் இணைக்கும் மூன்று பாலங்களையும் ரஷ்ய படைகள் தகர்த்துள்ளன.
இதனால் பொதுமக்கள் வெளியேற வழியின்றி சிக்கி இருக்கும் நிலையில், நகரின் தொழிற்சாலை பகுதியின் இரசாயன ஆலையில் 500 மேற்பட்ட பொதுமக்கள் பதுங்கியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற வாய்ப்பு
இந்தநிலையில், அசோட் இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற நாளை வாய்ப்பு வழங்குவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான மனிதாபிமான வழிகளை ரஷ்யா நாளை காலை 5 மணிக்கு திறக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனிய வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்ய படைகளிடம் சரணடையுமாறும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சரணடைய உத்தரவிடுமாறும் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.