நிதி அமைச்சின் செயலாளர் இரகசியமாக அனுப்பிய அறிக்கையை நிராகரித்த ஹர்ஷ

Parliament of Sri Lanka Harsha de Silva
By Kamal Jun 03, 2026 01:08 AM GMT
Report

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக, நிதியமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை தாம் முற்றாக நிராகரித்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அறிக்கையை குழுவிடம் இருந்து மறைத்து, தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் அனுப்ப நிதியமைச்சின் செயலாளர் எடுத்த முயற்சியை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிதி மோசடி தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சின் செயலாளருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு நீண்ட தாமதத்திற்குப் பின்னர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில், “குழுவின் கௌரவத் தலைவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாத்திரம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் இரகசியமாக அனுப்பிய அறிக்கையை நிராகரித்த ஹர்ஷ | Harsha Rejected The Individual Report From Fin Sec

நான் இந்நாட்டு மக்களை ஜனநாயக ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர். தற்போது அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக நான் அமர்ந்திருப்பது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துவதற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை கேட்கப்பட்டது நான் தனியாக வாசிப்பதற்காக அல்ல, நிதிக்குழுவில் சமர்ப்பித்து கலந்துரையாடுவதற்கே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த அறிக்கையை பொறுப்பேற்க மறுத்து நிராகரித்ததுடன், அதனை நாடாளுமன்றின் ஊடாகவே மீண்டும் நிதியமைச்சுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழுவிற்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் தர்க்கங்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் நாடாளுமன்ற பாரம்பரியம், தொழில்முறைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயகத்தை ஒடுக்க முயன்ற இந்த முயற்சிக்கு எதிராக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், இன்று ஒட்டுமொத்த நாடாளுமன்றக் குழுவிற்கும் பகிரங்கப்படுத்தக்கூடிய வகையிலான புதிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், குழுவின் உறுப்பினர்கள் அதனை ஆராய்ந்து, அடுத்த சில நாட்களுக்குள் அது குறித்து உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவுள்ளனர்.

இவ்வாறான கலந்துரையாடல்களையோ அல்லது அறிக்கைகளையோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களிடமிருந்து மறைத்து செய்யக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அரச நிதி தொடர்பான பொறுப்பை தனிப்பட்ட முறையில் தன் மீது சுமத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US