ரஷ்யாவில் இரவோடு இரவாக தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் மீது இரவோடு இரவாக உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், அங்குள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தி வசதிகள் பலத்த சேதத்திற்கு உட்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் நிலைமை உடனே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இடைமறிக்கப்பட்ட ட்ரோன்கள்
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சர்வதேச அணுசக்தி நிறுவனம்(IAEA) உக்ரைன் தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டை தனிப்பட்ட ரீதியாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அணுசக்தி வசதிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிற்குள் நுழைந்த 95 உக்ரைனிய ட்ரோன்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு படையினரால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உக்ரைனுக்குள் நுழைந்த 72 ரஷ்ய ட்ரோன்களில் 48ஐ இடைமறித்ததாக உக்ரைனும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



