ரஷ்யாவின் சரமாரி தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன்
உக்ரைனின்(Ukraine)கார்கிவ் நகரிலுள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியதாக சர்சதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது இன்று(22.06.2024) மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (olodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ஆயுத உதவிகள்
உக்ரைன் மீது கடந்த 2022 ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் நீடித்து வருகின்றது.
மேலும், மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளால் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிற நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சி இன்னும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளதோடு19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் ,16 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி மீது ரஷ்யா 8 முறை தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
