ரஷ்யாவில் நடைபெற்ற பயங்கரம் - செய்மதியில் பார்த்து ரசித்த அமெரிக்கா
உக்ரைன்-ரஷ்யா(Russia) மீது மேற்கொண்ட தாக்குதலை தாங்கள் செய்மதியினூடாக நேரடியாக பார்த்ததாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ரஷ்ய- உக்ரைன் போரை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் குறிப்பிட்டார் எனினும் அவரால் அதனை செய்யமுடியவில்லை.
“இந்த போர் தற்போது ஒரு தணிவுநிலையை கொண்டு வந்தால் அது நேட்டோவின் வெற்றியாக முடியும். அண்மையில் ரஷ்ய மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.
இதற்கு அமெரிக்கா அல்லது, ஐரோப்பிய ஒன்றியம் உதவியிருக்கலாம். அமெரிக்காவின் CIAயும் பிரித்தானியாவின் M16யும் இல்லாமல் இந்த தாக்குதலை உக்ரைனால் நடத்தியிருக்க முடியாது என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் இந்த தாக்குதலை நேரடியாக செய்மதியூடாக பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அது ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்மதியல்ல அது தங்களுடைய செய்மதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
