கருணாவை எதிர்த்தவரை கட்சியில் இருந்து வெளியேற்றிய சுமந்திரன் அணி!
தமிழரசுக் கட்சியின் அதிகார மட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கட்சியினுள் வந்து சேர்ந்தவர்கள்.
தமிழரசுக் கட்சியில் இன்று பொறுப்புக்களில் இருக்கின்ற அனேகமானவர்களுடைய கடந்த கால வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், 2009ம் ஆண்டுக்கும் முன்னர் வரை அவர்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் எந்தவிதத் தொடர்புமே இருந்திருக்காது.
கொழும்பில் சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்துவந்தவர்கள், அல்பட் துரையப்பா தமிழின விடிவுக்கு எதிராக அடக்குமுறையைப் பிரயோகித்தபோது அவருடன் தோழோடு தோள் நின்று அவரை உற்சாகப்படுத்தியவர்கள், தமிழினப்படுகொலையாளிகளுடன் இனைந்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் - இவர்கள்தான் இன்று தமிழரசுக் கட்சியை வழிநடாத்துகின்றவர்கள்.
பின்வாசல் வழியாகத் தமிழரசுக் கட்சியினுள் நுழைந்து, அந்தக் கட்சியின் தூண்களையெல்லாம் ஒன்றொன்றாக அகற்றி, ஒரு தற்காலிக வெற்றிடத்தைக் கட்சியினுள்ளே உருவாக்கிவிட்டு, பின்னர் அந்தக் கட்சியை முற்றிலுமாக ஆக்கிரமித்துவைத்துள்ளவர்கள்தான் இன்றை நிர்வாகிகள்.
கட்சியின் தூண்களாக இருந்த பலரை அவர்கள் தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேற்றிவருகின்றார்கள்.
குறிப்பாக ஒரு காலத்தில் தனது உயிரை துச்சமென மதித்து கருணாவை தீவிரமாக எதிர்தவர்களை இன்று கட்சியை விட்டு வெளியேற்றிவைத்துள்ளார்கள்.
தேசியத்திற்காக ஏராளமான அர்ப்பணிப்புக்களைச் செய்தவர்கள் இன்று தமிழரசுக் கட்சியில் இல்லை. தமிழரசுக் கட்சியினுள் நிலவும் சில வினோதமான காரியங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri