நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஏல விற்பனை நாளைய தினம்(11.06.2025) நடைபெறவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam