ஏல விற்பனைக்கு வரும் திறைசேரி உண்டியல்கள்! மத்திய வங்கியின் அறிவித்தல்
167,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 04 ஆம் திகதி இந்த ஏல விற்பனை நடைபெறவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏல விற்பனை
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 22,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க.. Cineulagam