அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி: பெருந்தொகை டொலர்கள் நாசம்
அமெரிக்காவில் சிகோபி பகுதியில் இலங்கை உணவக லொறியான Island Spice தீவிபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளது.
அதன் உரிமையாளர் டீ பெர்னாண்டோ என்ற பெண், வியாழக்கிழமை காலை ஒரு உணவு தொடர்பான நிகழ்வுக்குச் செல்லும் வழியில் தனது உணவு லொரி தீப்பிடித்ததாக கூறினார்.
எனது உறவினர் லொறியை ஓட்டி வந்தார். அதில் இருந்து திடீரென புகை வெளியேற தொடங்கியபோது நான் பின்னால் இருந்தேன்,” என பாதிக்கப்பட்ட இலங்கை பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சமையலறை
2022ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உணவு லொறியை இனி பயன்படுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்த லொறி எங்களுக்கு சமையலறையை விட மிகவும் பெரியது. இது எங்கள் இதயத்தின் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்துகளிலிருந்து பாதுகாக்கவும், அது விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் லொறிக்கு சரியான உபகரணங்களைப் பெற ஆயிரக்கணக்கான டொலர்களை செலவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பெர்னாண்டோ தெரிவித்தார்.
தீ விபத்து
இதையெல்லாம் மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று எனக்குத் தெரியவில்லை என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        