ஜெர்மனி வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு வழங்கப்பட்ட குடியுரிமைகள்
கடந்த ஆண்டு மாத்திரம் ஜெர்மனி, 249,901 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அதிகாரப்பூர்வ பதிவுகள் தொடங்கிய 2000ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குடியுரிமைகள் ஆகும்.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டை விட 50,000 அதிகம் ஆகும்.
புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாடு
இந்நிலையில், கடந்த அரசாங்கம் குடியுரிமை விதிகளில் கொண்டுவந்த சீர்திருத்தங்களே அதிக எண்ணிக்கையில் குடியுரிமை வழங்கப்பட்டமைக்கான காரணாமாக கூறப்படுகின்றது.

எனினும், ஜெர்மனியில் ஆட்சியமைத்துள்ள புதிய கூட்டணி அரசாங்கம் குடியுரிமை தொடர்பான விதிகளை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

இருப்பினும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டு விதி மற்றும் இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்கள் மாறாது என எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan