உளவுப்பார்த்ததாக குற்றம் சுமத்தி பிரித்தானிய இராஜதந்திரிகளை வெளியேற்றிய ரஷ்யா
உளவுப்பார்த்ததாகவும், நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி, மொஸ்கோவில் உள்ள ஆறு பிரித்தானிய இராஜதந்திரிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றது என்று பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதத்தில் தமது நாட்டின் பாதுகாப்பு சேவையால், ரஷ்ய பாதுகாப்பு சேவையை தமது நாட்டில் இருந்து அகற்றியமைக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
புடினின் எச்சரிக்கை
பிரித்தானிய பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்ற சில மணித்தியாலங்களிலேயே இந்த நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ளது.
இதேவேளை, மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் உக்ரைன், ரஷ்ய நிலப்பரப்பைத் தாக்க அனுமதித்தால், மேற்கு நாடுகளுடன் ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிடும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
