உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதல்: எாிபொருள் நிலையங்கள் இலக்கு
உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
அத்தோடு, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தலைநகர் மேயர் விட்டாலி க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஒன்றின் சக்திவள மையங்கள் மீது மற்றையது தாக்குதல் நடத்துவதில்லை என உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்
அண்மைக்காலமாக உக்ரேனின் சக்திவள உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து வரும் ரஷ்யா, தற்போது எாிபொருள் நிலையங்கள் மீதும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, உக்ரேனும் பதிலடித் தாக்குதலாக ரஷ்யாவின் தாகன்ரொக் பகுதியிலுள்ள மின்-வணிகக் களஞ்சியசாலை மற்றும் சமாரா பிராந்தியத்திலுள்ள தொழிற்துறை வளாகம் என்பனவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா ஆகியன தமது வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் போர் விமானங்களை அவசரமாக இயக்கின.
இதில் லிதுவேனியாவில் வான்வெளியை அண்மித்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.