ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள் - புடினுக்கு சொல்லப்பட்ட தகவல்
மரியுபோலின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த மீதமுள்ள உக்ரைன் போராளிகளும் "சரணடைந்துள்ளனர்" என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சரணடைந்தவர்களில் 531 பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை உக்ரேனிய போராளிகளிடமிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
அசோவ்ஸ்டல் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலின் கடைசி பெரிய கோட்டையாகக் கருதப்பட்டது. ஏனெனில் இந்த பகுதி புடினுக்கு மிக முக்கிய இலக்காக காணப்பட்டது.
குறித்த பகுதி கிரிமியாவிற்கும் ரஷ்ய சார்பு பிரிவினைவாத கட்டுப்பாட்டு பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் இடையே ஒரு நில நடைபாதையை கொண்டது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த ஆலையில் உக்ரைன் போராளிகள் பதுங்கியிருந்த நிலத்தடி வசதிகள் ரஷ்ய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களில் மொத்தம் 2,439 உக்ரைக் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.