ரஷ்யா - சீனா கூட்டு கடற்படை பயிற்சி எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் இல்லை: கிரெம்ளின் விளக்கம்
சீனாவின் கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்வெளியில் திங்கட்கிழமை தொடங்கிய ரஷ்யா மற்றும் சீனாவின் கூட்டு கடற்படைப் பயிற்சி, எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், இது பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை நடைபெற உள்ளது.
இதற்காக ரஷ்யாவின் பசிபிக் கடற்படையில் இருந்து ஒரு குரூஸர் ரகப் போர் கப்பல், ஒரு கார்வெட் ரகக் கப்பல், டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஒரு மீட்புக் கப்பல் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ (RIA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்காப்பு நோக்கம்
இந்த கூட்டுப் பயிற்சியானது மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையேயான கடற்படை ஒத்துழைப்பை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும், முற்றிலும் தற்காப்பு நோக்கங்களை மட்டுமே கொண்டது என்றும் ரஷ்யாவின் ரியர் அட்மிரல் செர்ஜி சின்கோ தெரிவித்துள்ளார்.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து இந்த பயிற்சிக்கு ஏதேனும் எதிர்மறையான கருத்துகள் வரக்கூடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதில் அளித்துள்ளார்.

"எங்கள் கூட்டுப் பயிற்சிகள் யாருக்கும் எதிராகவோ அல்லது பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கு எதிராகவோ நடத்தப்படவில்லை. இதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மாறாக, இத்தகைய முக்கியமான மற்றும் இக்கட்டான துறையில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் முன்கணிப்புத் தன்மைக்கு பங்களிக்கும் ஒரு மிக முக்கியமான காரணியாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan