இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை நாட்டுக்கு அனுப்ப ரஷ்யா இணக்கம்
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ரஷ்யாவில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவ ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் (Alexandr Gutsan), சுமார் 10 சந்தேகநபர்களை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
10 குற்றவாளிகளை இலங்கைக்கு அனுப்பட்ட நடவடிக்கை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய சட்டமா அதிபருக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, இணையக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்திலும் ரஷ்ய சட்டமா அதிபர் கைச்சாத்திட்டுள்ளார்.
ஊழல், இணையக் குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியவை இரு நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றைக் கட்டுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.