உக்ரைன் - ரஷ்யா போர்! - தெர்மோபரிக் ஆயுதங்களை பயன்படுத்திய ரஷ்யா
உக்ரைனில் தெர்மோபரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
TOS-1A ஆயுத அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய பிரதிநிதி தெரிவித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
The Russian MoD has confirmed the use of the TOS-1A weapon system in Ukraine. The TOS-1A uses thermobaric rockets, creating incendiary and blast effects.
— Ministry of Defence ?? (@DefenceHQ) March 9, 2022
Watch the video below for more information about this weapon and its devastating impact.
?? #StandWithUkraine?? pic.twitter.com/d8PLQ0PhQD
தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன?
சுற்றுப்புற காற்றில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலை வெடிப்பை உருவாக்குவதே தெர்மோபரிக் ஆயுதங்களாகும்.
உக்ரைனில் நடந்த சண்டையில் ரஷ்யா தெர்மோபரிக் ஆயுதம் அதாவது வேக்யூம் வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
அண்மையில் உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஒக்திர்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அழித்த வெடிப்பு ஒரு தெர்மோபரிக் ஆயுதத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
வேக்யூம் குண்டுகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
தெர்மோபரிக் வெடிபொருட்கள் என்றும் அழைக்கப்படும் வாக்யூம் குண்டுகள் இரண்டு நிலைகளில் வேலை செய்கின்றன. முதல் நிலையில் வெடிக்கும் மின்னூட்டமானது, எரிபொருளை சிதறடித்து மேகத்திரள் போன்ற ஒன்றைத் தோற்றுவிக்கும்.
இது கட்டிடங்களுக்குள் நுழையும். பொருட்களைச் சுற்றி வளைக்கும். இரண்டாம் நிலை, இந்த மேகத்திரள் பற்றும். இது ஒரு பெரிய நெருப்புப்பந்தை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி அதிர்வு அலையை ஏற்படுத்துகிறது.
"ஒரு சாதாரண வெடிபொருளின் எடையில் 30% எரிபொருளாகவும், 70% ஆக்சிடைசராகவும் இருக்கும். ஆனால் தெர்மோபரிக் வெடிமருந்தில் முழு எடையுமே எரிபொருளாக இருக்கும்.
அது காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறது. எனவே அவை மிகவும் சக்திவாய்ந்தவை,"என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் ரிசர்ச் ஃபெலோ, ஜஸ்டின் பிராங்க் குறிப்பிட்டார்.