உக்ரைனுக்கு படைகள் செல்ல ரஸ்ய ஜனாதிபதி அங்கீகாரம்! விரைவில் பதிலளிக்கப்படும் - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைக்னின் இரண்டு பகுதிகளை சுதந்திர நாடுகளாக ரஸ்ய ஜனாதிபதியின் அறிவித்தார்.
ரஸ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் இரண்டு பிரிந்த பகுதிகளை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ளார்.
இதனையடுத்து அவர் கையொப்பமிட்ட கட்டளைகளின்படி, ரஸ்ய துருப்புக்கள் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கில் என்ற உக்ரைனின் பகுதிகளுக்கு அமைதிகாக்கும் செயல்பாடுகள்" என்ற அடிப்படையில் செல்லக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ரஸ்யாவின் தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய புடின், யுக்ரைன் ஒரு உண்மையான தேசமாக இருந்த வரலாறு இல்லை என்று கூறியுள்ளார்.
அது. அமெரிக்காவின் பொம்மை நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுக்ரேனிய ஜனாதிபதிக்கு 'விரைவாகவும் தீர்க்கமாகவும்' பதிலளிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்போது யுக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் பைடன் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா, ரஸ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் உக்ரேனிய ஜனாதிபதியிடம் கூறினார்,
அத்துடன் மேலும் ரஸ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக விரைவாகவும் தீர்க்கமாகவும்" பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த நடவடிக்கை யுக்ரைனின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் இது மிகவும் இருண்ட அடையாளம் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேட்டோ தற்காப்பு கூட்டணியின் தலைவர், இது பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளை சிதைக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து ஏர் பிரான்ஸ் மற்றும் லுஃப்தான்சா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் படையெடுப்பு அச்சம் காரணமாக யுக்ரைனுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam