உக்ரைன் மீது எறிகனை தாக்குதல்! ரஸ்ய படையெடுப்பின் ஆரம்பமா? ஏற்பட்டுள்ள அச்சம்!(Photo)
உக்ரைன் மீது நடத்தப்பட்ட எறிகனை தாக்குதல், ரஷ்யாவின் உடனடியான படையெடுப்பு பற்றிய மேற்கத்திய அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய சார்புப் படைகள் நேற்று வியாழக்கிழமையன்று மழலையர் பாடசாலை ஒன்றின் மீது எறிகனைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.
இதனை அவர் "பாரிய ஆத்திரமூட்டல்" சம்பவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து உக்ரைன் படையினருக்கும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் இடையே நேற்று அதிகாலையில் நடந்த துப்பாக்கி சண்டையும் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் காவல்துறையினர் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், குழந்தைகளுக்கான பொம்மைகளுடன் சிதறிய ஒரு அறையில் சுவர் வழியாக துளை இருப்பதைக் காட்டியது.
எனினும் இந்த தாக்குதலை அடுத்து யுக்ரெய்ன் மீதான படையெடுப்பை, மொஸ்கோ நிராகரித்துள்ளது.
அதேநேரம் ரஸ்யாவின் கிரம்ளின் நிர்வாகம், அமெரிக்க ராஜதந்திரி ஒருவரை வெளியேற்றியுள்ளது.
இந்தநிலையில், தமது தாக்குதலை நியாயப்படுத்த மொஸ்கோ காரணங்களை உருவாக்கி வருவதாக அமரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையில் அடுத்த வார இறுதியில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன், அமெரிக்க ராஜாங்க அமைச்சர் என்டனி பிளிங்கள் யுக்ரெய்ன் நெருக்கடி குறித்து விவாதிப்பார், என்று அறிவிக்கப்பட்டுள்ளது



