பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதி தலையீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவரின் தலையீட்டின் பேரில் பதில் பொலிஸ் மா அதிபர் , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கான இடமாற்ற உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளதாக அரசியல் தரப்புகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான பீ.எல்.விதான, மன்னார் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரை சொந்த ஊருக்கு வரவழைப்பதற்காக அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எஸ். தர்மதாச, மன்னார் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு
குறித்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் சிபாரிசின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதியொருவரின் தலையீடு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக பொலிஸ் அத்தியட்சகர் எம்.குணவர்த்தன கண்டியில் இருந்து கம்பளைக்கும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ. புல்வங்ச சிலாபம் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |