வீதியில் வெற்றிலை எச்சில் துப்பிய சாரதிக்கு இப்படி ஒரு நிலை..!(Video)
இலங்கையில் காணப்படும் சட்டதிட்டங்கள் மக்களால் முறையாக பின்பற்றபடுகின்றதா என்ற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
அதிலும் பாதைகளில் செல்லும் மக்கள், தமது வீட்டு குப்பைகளை கூட பாதைகளில் வீசி செல்லும் நிலைப்பாடே காணப்படுகின்றது.
இதனால் வீதிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியிலே தமது பணிகளை செய்கின்றனர்.
இவ்வாறான ஒரு பொறுப்பற்ற தன்மையில் சாரதி ஒருவர் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதாவது லொறி ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவர் வாகனத்தை செலுத்தும் போது பாதையில் வெற்றிலை எச்சிலை துப்பியுள்ளார்.
இதன்போது அவ்விடத்தில் பணியில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி வெற்றிலை எச்சில் துப்பிய சாரதியையே அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த செயற்பாடு வீதிகளில் இவ்வாறான அசுத்தமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
