இலங்கையில் பணமின்மையால் நிராகரிக்கப்படும் காசோலைகள்! பாரிய பிரச்சினை என தகவல்
இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வங்கியில் பணமின்றி இந்த காசோலைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
காசோலை நிராகரிப்பு பாரிய பிரச்சினை
இவ்வாறு பாரியளவிலான தொகை காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினை என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீட் ஜீரான் தெரிவித்துள்ளார்.
இதனால் அநேகமான வியாபாரங்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2022ம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பகுதிகளில் சுமார் 250,000 காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன.
இரண்டாம் காலாண்டில் சதவீதம் உயர்வு
இந்த காசோலைகளின் மொத்தப் பெறுமதி 59.6 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் காலாண்டில் சுமார் 192300 காசோலைகள் நிராகரிக்கப்பட்டன.
காசோலை நிராகரிப்பு சந்தர்ப்பங்கள் முதலாம் காலண்டில் 2.1 வீதமாக காணப்பட்டதாகவும் இரண்டாம் காலாண்டு பகுதியில் இது 3.2 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
