முள்ளியவளையில் பத்து இலட்சம் வென்ற வெற்றியாளருக்கு காசோலை வழங்கி வைப்பு(Photos)
இலங்கை அபிவிருத்தி லொத்தர் சபையினால் பத்து இலட்சம் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கான பணம் வழங்கும் நிகழ்வு இன்று (12.010.2022) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்களுக்கான பரிசு தொகைகளை மாவட்டங்களுக்கு சென்று விற்பனை முகவர்கள் ஊடகா வழங்கும் நடவடிக்கை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளருக்கான பணம் வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் வெற்றியாளர் ஒருவரான முள்ளியவளையினை சேர்ந்த கனகரத்தினம் கோகுலன் என்பவருக்கான பத்து இலட்சம் ரூபா காசோலை வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இதன்போது விற்பனை முகவர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐனாதிபதி நிதியத்திற்கு நிதி சேர்த்தல்
ஐனாதிபதி நிதியத்திற்கு நிதிசேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் ஊடாக வடக்கில் பல இலட்சாதிபதிகளை உருவாக்கி வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பத்து இலட்சம் ரூபா வெற்றியாளருக்கான பரிசு காசோலை புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பத்து இலட்ச வெற்றியாளர்களுக்கான பரிசு காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை 39 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கான காசோலை வழங்கி வைக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையானது வடக்கு கிழக்கில் விசேடமாக வலம்புரி அதிஸ்ட டிக்கட்டுக்கள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் 28.10.22 அன்று மாபெரும் பரிசு தொகையினை வழங்கவுள்ளதாக அபிவித்தி லொத்தர் சபையினர் தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் பிரதீபன்
தலைமையில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் அபிவிருத்தி தலைவர்
அஜித்குணரத்ன நாரகல, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எம்.பி.ஆர்.கேரத் மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை பகுதி
உதவிப்பொது முகாமையாளர் சுனிஜெரத்தின உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு காசோலையினை
வழங்கிவைத்துள்ளார்கள்.