விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை
கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் (FTRA) விதிகளுக்கு இணங்கத் தவறிய 11 நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இன்று(20.07.2026) இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) வெளியிட்டுள்ளதுடன், 11 நிறுவனங்களுக்கு அபராதத் தொகை 14.6 மில்லியன் இலங்கை ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களோடு தொடர்புபடும் சர்ச்சைக்குரிய மரணங்கள்! மீண்டும் போர் வெற்றியை கையிலெடுக்கும் மகிந்த தரப்பு
14.6 மில்லியன் ரூபாய் அபராதம்
இலங்கையின் பணமோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் (AML/CFT) ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படும் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அச்சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் நிர்வாகத் தண்டனைகளை விதிக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறலின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இந்தத் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், தண்டனையாக வசூலிக்கப்பட்ட அனைத்துப் பணமும் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை, அறிக்கை நிறுவனங்களிடையே இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி அமைப்பின் நேர்மையை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO