வவுணதீவு வயலில் ஆர்பிஜி லோஞ்சர் மீட்பு
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
குறித்த வயலை சம்பவதினமான நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல் உரிமையாளர் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று நிலத்திலிருந்து வெளியே வந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சென்று குறித்த ஆர்பிஜி லோஞ்சரை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் இந்த பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக
இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


