கொழும்பு துறைமுகத்தில் அழுகிய மீன்கள்
கொழும்பு துறைமுகத்தில் இயற்கை உரம் தயாரிக்க என அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் அரசாங்க கணக்காய்வு குழு குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த கப்பலை இலங்கைக்கு தரையிறக்கிய பிரதிநிதிக்கு சொந்தமாக ஒரு டின்மீன் தொழிற்சாலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
மீன் கழிவுகளை இறக்குமதி செய்வதற்காகவே குறித்த பிரதிநிதிக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் டி.டி உபுல்மலி பிரேமதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மார்ச் மாதம் 5ஆம் திகதி இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இதனுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும் கப்பலில் இருந்த கெட்டுப்போன மீன்கள் அடங்கிய 04 கொள்கலன்களுக்கு என்ன நடந்தது என தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |