திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அலஸ் தோட்டம் இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பகியுள்ளது.
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என கேள்வி எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கணவர் பிள்ளைகளை இழந்து அவர்களுக்கான தீர்வு இன்னும் கிடைக்காத நிலையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது இதனை நாங்கள் தொழுகின்றோம்.
எமக்கு நீதி கட்டாயம் தேவை எமக்கு நீதி வழங்க விட்டால் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒரு சட்டமும் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டமும் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam