ஆடம்பர ரோல்ஸ் ராய்ஸ் காரினை அடுத்து உலங்குவானூர்தி! இலங்கை கோடீஸ்வரரின் நெகிழ்ச்சி பதிவு
இலங்கையில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, உலங்குவானூர்தி கொள்வனவு செய்வதற்காக 2026 சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நவீன உலங்குவானூர்தியை வாங்குவதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை தொடங்கியுள்ளார்.
எதிர்கால நம்பிக்கை
இந்த நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பிலும், தனது எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும் இவ்வாறு பகிர்ந்துள்ளார். "பல தியாகங்களை செய்து, எனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்றியுள்ளேன். இது எனது அடுத்த கனவு. மிக விரைவில் எனது ஹெலிகொப்டர் கனவையும் நிறைவேற்றுவேன்." என தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சியின் போது, அவர், தொழில்முறை குழுவுடன் சேர்ந்து, உலகப் புகழ்பெற்ற பெல் டெக்ஸ்ட்ரான் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து, ஆரம்பகட்ட கலந்துரையாடலையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக, இலங்கையில் உள்ள பெல் வணிக விமான விற்பனை நிறுவனமான சிலோன் ஏரோநாட்டிகல் சர்வீசஸ் (CAS) ஆதரவு அளித்ததுள்ளது.
அரலிய அரிசி விற்பனை உட்பட 25 வணிகங்களை வைத்திருக்கும் டட்லி சிறிசேன, சமீபத்திய நாட்களில் ஆடம்பர ரோல்ஸ் ராய்ஸ் காரை கொள்வனவு செய்ததன் மூலம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.