அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் ரோஹித் சர்மா
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ள போர்டர் - கவாஸ்கர் கிண்ண, ஐந்து டெஸ்ட் போட்டிகளின் முதல் இரண்டில் ஒன்றில் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட அழுத்தமான விடயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்டில் ஒன்றை தவிர்க்க வேண்டியிருக்கும் என்று ரோஹிட் சர்மா, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் அறிவித்துள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பேர்த்தில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.
மாற்று வீரர்
அதன் பின்னரான, இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இதில் ஒன்றிலேயே ரோஹிட் சர்மா பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் தனிப்பட்ட பிரச்சனை தீர்க்கப்பட்டால், அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஒரு போட்டியை இழக்க நேரிட்டால், அவருக்கு பதிலாக தற்போது சிறந்த பயிற்சியுடன் இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் போட்டிக்காக அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதில் தலைவர்
இந்தநிலையில் இந்திய அணிக்கு துணை தலைவர் இல்லாததால், ரோஹித் இல்லாத போட்டியில் யார் தலைவராக பொறுப்பேற்க முடியும் என்பதில் இன்னும் தெளிவு இல்லை.
எனினும், ரோஹித் இல்லாத நிலையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணியை வழிநடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
