இலங்கை மகளிரின் மோசமான கிரிக்கட்டை ஏற்க முடியாது - பயிற்றுவிப்பாளர்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் மோசமான கிரிக்கெட், ஏற்றுக்கொள்ள முடியாதது என குறித்த அணியின் பயிற்றுவிப்பாளர் ருமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி, இந்திய அணியிடம் 82 ஓட்டங்களால் தோல்வி கண்டதை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கிண்ண முக்கிய போட்டிகள் அனைத்திலும், இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து உட்பட்டவர்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மூன்று போட்டிகளிலும் தோல்வி
இலங்கை அணிக்கு திறமையிருந்தபோதும், அதனை வீராங்கனைகள் தவறவிட்டதாகவே தாம் கருதுவதாக ருமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை, இலங்கை அணி தாம் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளமை தொடர்பிலேயே அவரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |