க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்கள் இந்த மாதம் 20 ஆம் திகதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காலிக தேசிய அடையாள அட்டை
அனர்த்த நிலைமை காரணமாக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியாத மாணவர்கள், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு, அதிபர் மற்றும் பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், உயர்தரப் பரீட்சை காரணமாக இன்று முதல் இந்த மாதம் 20 ஆம் திகதி வரை அரச பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.